வர்த்தகம்

சாம்சங்கின் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

DIN


சாம்சங் நிறுவனம் முதல் முறையாக மூன்று கேமராக்கள் அடங்கிய கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
எங்களின் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் படம் எடுப்பதை அதிகம் விரும்புகின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 18 முறை ஸ்மார்ட்போனை திறக்கும் வாடிக்கையாளர்களில் 44 சதவீதம் பேர் கேமராவை பயன்படுத்துகின்றனர். மேலும், ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எடுக்கும் போட்டோக்களை அனுப்புவதற்கு முன்பாக 40 சதவீதம் பேர் அதனை எடிட் செய்கின்றனர்.
எனவே, வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து நிறுவனம், மூன்று கேமராக்கள் அடங்கிய கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அல்ட்ரா வைட் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், எந்த கோணத்திலிருந்தும் படம் எடுக்கலாம். மேலும் கூடுதலாக 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ் கேமராவும் இப்புதிய ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ளது. 
கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸினோஸ் 7885 2.2ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ7 (4ஜிபி/64ஜிபி) மாடலின் விலை ரூ.23,990-ஆகவும், (6ஜிபி/128ஜிபி) மாடலின் விலை ரூ.28,990-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT