வர்த்தகம்

கடன்பத்திரங்கள் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்

DIN

தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான "செபி' யிடம் தெரிவித்துள்ளதாவது: விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை கடன்பத்திரங்கள் மூலம் திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த 12 மாதங்களில் நீண்டகால கடன் பத்திரம் மற்றும் மூலதன கடன்பத்திரங்கள் தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.50,000 கோடி வரையில் நிதி திரட்டிக் கொள்ளப்படும்.
 ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT