வர்த்தகம்

ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்

DIN

தென் கொரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், இந்தியாவில் தனது கிராண்ட் ஐ10 நியோஸ் காரை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இதன் மூலம், இந்தியாவின் சிறிய வகைக் கார்களுக்கான சந்தையில்  தனது கார் ரகங்களின் எண்ணிக்கையை அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தனது கிராண்ட் ஐ10 நியோஸ் ரகக் காரை ஹுண்டாய் நிறுவனம் தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ரூ.4.99 முதல் ரூ.7.99 வரை (காட்சியக) விலையிடப்பட்டுள்ள இந்தக் கார்கள், பெட்ரோல், டீசல் ஆகிய இரு வகை ரகங்களிலும் கிடைக்கும்.
பெட்ரோல் ரகங்களைப் பொருத்தவரை, கியர்கள் மூலம் இயக்கப்படும் ரகங்கள், கியர்கள் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ரகங்கள் ஆகிய இரு பிரிவிலும் ஐ10 நியோஸ் கார்கள் சந்தையில் கிடைக்கும். 
இந்த ரகக் கார்கள் ரூ.4.99 லட்சத்திலிருந்து ரூ.7.14 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும்.
இதே போன்று, டீசல் வகையிலும் கியர்கள் மற்றும் தானியங்கி ரகங்களில் ரூ.6.7 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரையிலான விலையில் ஐ10 நியோக் கார்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
1.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஐ10 நியோஸ் கார்கள் லிட்டருக்கு 20.5 கி.மீ. வரை செல்லும் என்று ஹுண்டாய் தெரிவித்துள்ளது.
1.2 லிட்டர் டீசல் ரகங்கள் லிட்டருக்கு 26.2 கி.மீ. வரை செல்லும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
தில்லியில் இந்த ரகக் கார்களை அறிமுகம் செய்துவைத்து பேசிய ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயலதிகாரியுமான எஸ்.எஸ். கிம், கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் உலகச் சந்தைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய ரகம் என்று தெரிவித்தார்.
தொடக்கத்தில், மாதந்தோறும் 7,000 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பதாகத் 
தெரிவித்துள்ள ஹுண்டாய், தற்போது மாதம் 10,000-க்கும் மேல் விற்பனையாகி வரும் கிராண்ட் ஐ10 ரகக் கார்களும் சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT