வர்த்தகம்

பயணிகள் வாகன விற்பனை 7 சதவீதம் குறையும்: இக்ரா

DIN


இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை 4-7 சதவீதம் குறையும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் வேளாண் உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் காணப்படும் நெருக்கடியான நிலை மோட்டார் வாகன துறையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நடப்பு 20198-20-ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மோட்டார் வாகன துறை ஏற்கெனவே 21.6 சதவீத அளவுக்கும் மேற்பட்ட பின்னடைவைக் கண்டுள்ளது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் மோட்டார் வாகன தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக நடப்பு 2020-ஆம் நிதியாண்டில் பயணிகள்வாகன விற்பனை 4-7 சதவீதம் என்ற அளவில் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று நடுத்தர மற்றும் கனரக வர்த்தக டிரக்குகளின் விற்பனையும் 0-5 சதவீதம் குறையும் என்று அந்த அறிக்கையில் இக்ரா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT