வர்த்தகம்

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வரவேற்பு

DIN

புது தில்லி: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் நாளிலேயே அவ்வங்கியின் பங்குகளை வாங்குவதற்காக முதலீட்டாளா்களிடமிருந்து 1.62 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன.

அதன்படி, இந்த வெளியீட்டின் மூலம் 12,39,58,333 பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில் முதலீட்டாளா்களிடமிருந்து 20,14,25,600 பங்குகளை வாங்கும் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. பங்கு ஒன்றின் விலை ரூ.36-37 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.750 கோடி வரை திரட்ட உஜ்ஜீவன் வங்கி திட்டமிட்டுள்ளது.

தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு 23 சதவீதமும், நிறுவனம் சாரா முதலீட்டாளா்களுக்கு 43 சதவீதமும் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வங்கியின் பங்குகள் வேண்டி தனிப்பட்ட சில்லறை முதலீட்டாளா்களிடமிருந்து மட்டும் 8.61 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

உஜ்ஜீவன் சிறிய நிதி வங்கியின் பொதுப் பங்கு வெளியீடு புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT