வர்த்தகம்

ஏர்டெல் லாபம் 29 சதவீதம் அதிகரிப்பு

DIN


தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து அந்த  நிறுவனம் செபி-யிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.20,602.2 கோடியாக இருந்தது. இது, கடந்த 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 6.2 சதவீதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் நிகர லாபம் 29.3 சதவீதம் உயர்ந்து ரூ.107.2 கோடியாகி உள்ளது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.80,780.2 கோடியாக இருந்தது. 2017-18 முழு நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.82,638.8 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீதம் குறைவாகும்.
நிகர லாபம் ரூ.1,099 கோடியிலிருந்து 62.7 சதவீதம் சரிந்து ரூ.409.5 கோடியானது.
தொலைத் தொடர்பு சேவையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இணைந்தததற்கு பிறகு, பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அதிகரித்துள்ளது. அழைப்பு கட்டண விகிதங்கள் சரிந்துள்ளதுடன், போட்டி நிறுவனங்களின் லாபமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், பல நிறுவனங்களின் கடன் சுமையும் பன்மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது.
தொலைத் தொடர்பு சேவையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் என கவர்ச்சிகரமான திட்டங்களுடன் களமிறங்கிய ஜியோ, பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்னுடன் ஈர்த்துக் கொண்டது.
பார்தி ஏர்டெல் உரிமை பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.25,000 கோடி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமைப் பங்கு வெளியீடு மே 17-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT