வர்த்தகம்

ஐடிசி நிகர லாபம் 18% அதிகரிப்பு

DIN


பல்வேறு வகையிலான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐடிசி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 18.72 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.12,946.21 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.11,329.74 கோடியுடன் ஒப்பிடுகையில் 14.26 சதவீதம் அதிகம்.
தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,932.71 கோடியிலிருந்து 18.72 சதவீதம் உயர்ந்து ரூ.3,481.9 கோடியானது.
எப்எம்சிஜி வர்த்தகத்தின் வாயிலாக பெற்ற வருவாய் ரூ.7,988.29 கோடியிலிருந்து ரூ.8,759.84 கோடியாக அதிகரித்துள்ளது. எப்எம்சிஜி துறையைச் சாராத ஹோட்டல், வேளாண், காகிதம் உள்ளிட்ட வர்த்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.3,517.1 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.4,148.05 கோடியை எட்டியுள்ளது. நடப்பாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5.75 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐடிசி புதிய தலைவர் நியமனம்: ஐடிசி நிறுவனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ் பூரி (56) நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மும்பை பங்குச் சந்தையிடம் ஐடிசி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT