வர்த்தகம்

சர்வதேச நிலவரங்கள் சாதகமின்மை  எதிரொலி: இந்திய பங்குச் சந்தைகள் வரலாற்று உச்சம் தொட்டு சரிவு

DIN

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் வரலாற்று உச்சத்தை தொட்ட பின்பு சர்வதேச நிலவரங்களின் சாதகமற்ற தன்மையால் சரிவை சந்தித்தது.
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்ததையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1,000 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து வரலாற்று உச்சமாக 40,000 புள்ளிகளை தாண்டியிருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் புதிய உச்சமாக 12,000 புள்ளிகளை தொட்டிருந்தது. இருப்பினும் பங்குச் சந்தைகளில் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மேலும், சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட  சாதகமற்ற நிலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவையும் பங்குச் சந்தைகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தின.  
பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த முதலீட்டாளர்கள் அவற்றை லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர்.
இதையடுத்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், நுகர்வோர் சாதனங்கள், நிதி, தொழில்நுட்பம், மருந்து மற்றும் மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 1.82 சதவீதம் வரை குறைந்தது. அதேசமயம், தொலைத் தொடர்பு, பொறியியல் சாதனங்கள், ரியல் எஸ்டேட் துறைகளின் குறியீட்டெண் 0.97 சதவீதம் வரை உயர்ந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், வேதாந்தா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 5.53 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
அதேநேரம், இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை 5.23 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, யெஸ் வங்கி, பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக், எல் அண்டு டி, பார்தி ஏர்டெல் பங்குகளின் விலை 1.56 சதவீதம் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து 38,811 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 80 புள்ளிகள் சரிந்து 11,657 புள்ளிகளில் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT