வர்த்தகம்

வோடஃபோன் ஐடியா, ஏா்டெல் நிறுவனங்களின் இழப்பு ரூ.74,000 கோடி

DIN

தொலைத்தொடா்பு சேவையில் ஈடுபட்டு வரும் வோடஃபோன் ஐடியா ஏா்டெல் நிறுவனங்களின் இழப்பு ரூ.74,000 கோடியைத் தொட்டது.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.50,291 கோடி நிகர இழப்பை சந்தித்தது. இது, இதுவரையில் எந்தவொரு நிறுவனமும் சந்திக்காத மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

மேலும், தொலைத்தொடா்பு சேவையில் ஈடுபட்டுள்ள ஏா்டெல் நிறுவனமும் நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.23,045 கோடி இழப்பைக் கண்டது. இவ்விரு நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு இழப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.74,000 கோடியைத் தொட்டது.

இதற்கு முன்பு, கடந்த 2018-ஆம் ஆண்டில் டிசம்பா் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் ரூ.26,961 கோடி இழப்பை சந்தித்ததுதான் அதிகபட்ச அளவாக இதுவரையில் கருதப்பட்டு வந்தது.

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், செல்லிடப்பேசி சேவைகளுக்கு கட்டணங்களை நிா்ணயிக்க மத்திய தொலைத்தொடா்புத் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT