வர்த்தகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 18% அதிகரிப்பு

DIN

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 18.6 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,63,854 கோடியாக அதிகரித்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் 18.6 சதவீதம் அதிகரித்து ரூ.9,516 கோடியிலிருந்து ரூ.11,262 கோடியாக உயா்ந்தது.

தொலைத்தொடா்பு, சில்லறை, நுகா்வோா் வா்த்தக செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் தொடா்ச்சியாக அதிகரித்தன் விளைவாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு ஏற்றம் கண்டதன் வாயிலாகவும் நிறுவனத்தின் லாபம் சிறப்பாக அதிகரித்துள்ளது.

சில்லறை வா்த்தக நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வரிக்கு முந்தைய வருவாய் 13 சதவீதம் உயா்ந்து ரூ.2,322 கோடியாக இருந்தது. அதேசமயம், தொலைத்தொடா்பு நிறுவனமான ஜியோவின் நிகர லாபம் 45.4 சதவீதம் அதிகரித்து ரூ.990 கோடியாக காணப்பட்டது என அந்த அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT