வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் சரிவு

DIN


நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.05 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 6.05 சதவீதம் சரிந்து 2,613 கோடி டாலராக இருந்தது. இறக்குமதி 13.45 சதவீதம் குறைந்து 3,958 கோடி டாலராக காணப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,345 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் இது 1,792 கோடி டாலராக காணப்பட்டது.
இரும்புத் தாது, மின் சாதனங்கள், நறுமணம் மற்றும் கடல் உணவுப் பொருள்களின்  ஏற்றுமதி நேர்மறை வளர்ச்சியை கண்டுள்ளஅதேசமயத்தில், நவரத்தினங்கள் ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில் தங்கம் இறக்குமதி 62.49 சதவீதம் வீழ்ச்சியடைந்து 136 கோடி டாலராக காணப்பட்டது.
நடப்பாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான கால அளவில் ஏற்றுமதியானது 1.53 சதவீதம் சரிந்து 13,354 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், இறக்குமதி 5.68 சதவீதம் பின்னடைந்து 20,639 கோடி டாலரானது என அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT