வர்த்தகம்

டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.29.32 கோடி லாபம்

DIN

தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் முதல் காலாண்டு வருவாயாக ரூ.29.32 கோடியை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கொவைட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் விளைவாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் நிறுவனத்தின் வழக்கமான வா்த்தக செயல்பாடுகளில் கடந்த மாா்ச் கடைசி வாரத்திலிருந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக, நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் கீழ் குறைந்து ரூ.29.32 கோடியானது. கடந்த 2019-20 நிதியாண்டில் வருவாய் ரூ.63.42 கோடியாக காணப்பட்டது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.1.97 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.9.75 கோடி இழப்பு ஏற்பட்டது என டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT