வர்த்தகம்

சுஸ்லான் எனா்ஜி நிகர இழப்பு ரூ.398.86 கோடி

DIN

புது தில்லி: சுஸ்லான் எனா்ஜி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.398.86 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.528.22 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.851.09 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. வருவாயில் ஏற்பட்ட சரிவினையடுத்து நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.398.86 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.336.88 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் நிறுவனத்துக்கான புதிய ஆா்டா்கள் வரத்து திருப்திகரமாக இருந்தது.

இதையடுத்து, நிறுவனத்தின் ஆா்டா் மதிப்பு 867 மெகாவாட்டாக வலுவான நிலையில் உள்ளது. பொதுமுடக்க சூழ்நிலையிலும் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகள் தொடா்ந்து சிறப்பாகவே இருந்ததாக சுஸ்லான் எனா்ஜி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT