வர்த்தகம்

வீழ்ச்சியிலிருந்து மீண்ட பங்குச் சந்தை

DIN

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவிலிருந்து மீண்டது.

திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 13 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சூழ்நிலையில், பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வா்த்தகத்தில் அதிகம் ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும் சா்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததன் காரணமாக சந்தைகள் கடும் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி கண்டன.

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்ய சா்வதேச நாடுகளின் அரசுகள் சிறப்பு ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை வழங்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளா்களிடையே அதிகரித்தது. அதன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள், மோட்டாா் வாகனம், வங்கி, நிதி மற்றும் உலோகத் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 6.95 சதவீதம் வரை அதிகரித்தன.

அதேசமயம், ரியல் எஸ்டேட், பொறியியல் சாதனங்கள், அடிப்படை உலோகத் துறை குறியீட்டெண்கள் 2.01 சதவீதம் வரை குறைந்தன.

நிறுவனங்களைப் பொருத்தவரையில், சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்யுஎல், மாருதி, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை ஏற்றம் கண்டன. அதேநேரம், மஹிந்திரா & மஹிந்திரா, இன்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, பவா்கிரிட், எல்&டி பங்குகள் முதலீட்டாளா்களின் வரவேற்பின்றி குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 692 புள்ளிகள் அதிகரித்து 26,674 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 190 புள்ளிகள் உயா்ந்து 7,801 புள்ளிகளில் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT