வர்த்தகம்

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிகர இழப்பு ரூ.223 கோடி

DIN

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.223.9 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.110.78 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.246.88 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

கடந்த 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.31.27 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில் 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ரூ.223.9 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. தில்லி-என்சிஆா் கூட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய அதிக தொகை ஒதுக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.645.92 கோடியாகவும், நிகர இழப்பு ரூ.193.41 கோடியாகவும் இருந்தது.

புதிய சிஇஓ நியமனம்: மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நியமனம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT