வர்த்தகம்

பொது முடக்க காலத்தில் இந்தியாவின் எரிவாயு உற்பத்தி பாதிப்பு

DIN

பொது முடக்கத்தின் எதிரொலியாக சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிவாயு உற்பத்தி ஐந்தில் ஒரு பகுதி சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இந்தியாவின் எரிவாயு உற்பத்தி 265 கோடி கன மீட்டராக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் கொவைட்-19 நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நடப்பாண்டு ஏப்ரலில் அதன் உற்பத்தியானது 216 கோடி கன மீட்டராக சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 18.6 சதவீதம் குறைவாகும்.

எரிவாயு தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஓஎன்ஜி நிறுவனத்தின் உற்பத்தி சென்ற ஏப்ரல் மாதத்தில் 15.3 சதவீதம் அளவுக்கு குறைந்து போனது. இதுவே, ஒட்டுமொத்த எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT