வர்த்தகம்

சிட்டி யூனியன் வங்கி: நிகர லாபம் ரூ.158 கோடி

DIN

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.157.66 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,230.27 கோடியாக இருந்தது. இது, வங்கி இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,231.80 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகும்.

வருவாய் குறைந்ததையடுத்து, நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.193.54 கோடியிலிருந்து ரூ.157.66 கோடியாக சரிவைச் சந்தித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் வருவாய் ரூ.2,424.33 கோடியிலிருந்து 1 சதவீதம் குறைந்து ரூ.2,440.22 கோடியாகவும், நிகர லாபம் ரூ.379.18 கோடியிலிருந்து சரிந்து ரூ.311.70 கோடியாகவும் இருந்தன.

வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.76,858 கோடியை எட்டியுள்ளது. இதில், வைப்புத் தொகை ரூ.41,421 கோடியாகவும், கடன்கள் ரூ.35,437 கோடியாகவும் உள்ளது என சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT