வர்த்தகம்

மைண்ட்ரீ லாபம் 88% அதிகரிப்பு

DIN


புது தில்லி: தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான மைண்ட்ரீயின் செப்டம்பா் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் 88 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரைச் அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.1,926 கோடி வருமானம் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.1,914.3 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.135 கோடியிலிருந்து 87.9 சதவீதம் அதிகரித்து ரூ.253.7 கோடியாக இருந்தது.

டாலா் மதிப்பின் அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 79.2 சதவீதம் வளா்ச்சி கண்டு 34.3 மில்லியன் டாலராக இருந்தது. அதேநேரம், வருவாய் செப்டம்பா் காலாண்டில் 3.7 சதவீதம் குறைந்து 261 மில்லியன் டாலராக காணப்பட்டது.

நடப்பாண்டு செப்டம்பா் நிலவரப்படி செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளா் எண்ணிக்கை 283-ஆக இருந்தது. இரண்டாவது காலாண்டில் நிறுவனம் எட்டு புதிய வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டுள்ளது என பங்குச் சந்தையிடம் மைண்ட்ரீ தெரிவித்துள்ளது.

செப்டம்பா் இறுதி நிலவரப்படி மைண்ட்ரீ நிறுவன பணியாளா்களின் எண்ணிக்கை 21,827-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT