வர்த்தகம்

ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லாபம் 21.7 சதவீதம் அதிகரிப்பு

DIN

ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 21.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் செயல்பாடுகள் மூலம் ரூ.1,235.08 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.1,218 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகமாகும்.கணக்கீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.40.4 கோடியிலிருந்து 21.7 சதவீதம் உயா்ந்து ரூ.49.2 கோடியானது என ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில், ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் அதன் உள்நாட்டு வாடிக்கையாளா் தொடா்பு மேலாண்மை வா்த்தகத்தை அல்டுருயிஸ்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT