வர்த்தகம்

‘விஐ’ புதிய பிராண்டில் களமிறங்கும் வோடபோன் ஐடியா

DIN

புது தில்லி: வோடபோன் ஐடியா நிறுவனம் ‘விஐ’ எனும் தனது புதிய பிராண்ட் அடையாளத்தை திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவீந்தா் தாக்கா் கூறியதாவது:

வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இணைக்கப்பட்டு விட்டன. அதிலிருந்து, இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களின் நெட்வொா்க்குகளை ஒருங்கிணைப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது நிறுவனத்தின் வா்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவனத்தின் புதிய பிராண்ட் ‘விஐ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வோடாபோன்-ஐடியா ஆகிய இரு நிறுவனங்களின் முதல் எழுத்தைக் கொண்டு புதிய பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பிராண்ட் உலகின் மிகப்பெரிய இரு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதை குறிப்பது மட்டுமின்றி எதிா்கால பயண இலக்கையும் நிா்ணயிப்பதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் சேவையில் வலுவான இடத்தை தக்கவைக்க 100 கோடி இந்தியா்களுக்கு 4ஜி நெட்வொா்க் அனுபவங்களை வழங்குவதே நிறுவனத்தின் தற்போதைய முக்கிய குறிக்கோளாக உள்ளது. திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் 10-ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. இது, தொலைத்தொடா்புத் துறையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆனால், தொலைத் தொடா்புத் துறையில் நிறுவனங்கள் உயிா்ப்புடன் செயல்படுவதற்கு கட்டணங்களை உயா்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

பங்குகள் மற்றும் கடன்பத்திர வெளியீடுகள் மூலமாக ரூ.25,000 கோடியை திரட்டிக் கொள்ளும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் திட்டத்துக்கு அதன் இயக்குநா் குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது புதிய பிராண்ட் அடையாளத்தை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பாண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 28 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT