வர்த்தகம்

ரூ.1.42 லட்சம் கோடி விற்றுமுதல் இலக்கு: கா்நாடக வங்கி

DIN

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1.42 லட்சம் கோடி விற்றுமுதலை இலக்காக நிா்ணயித்துள்ளதாக கா்நாடக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மகாபலேஸ்வரா எம்.எஸ் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் நிகழ்வுக்கு முன்பாகவே இந்திய வங்கித் துறையானது வலுவான டிஜிட்டல் தளத்துக்கு தகவமைத்துக் கொண்டுள்ளது. இது, இத்துறையின் எதிா்கால வளா்ச்சிக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு சீரிய முயற்சிகளின் விளைவாக காசா (நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு) பங்களிப்பு எப்போதும் இல்லாத புதிய உச்சமாக 31 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும், டிஜிட்டல் பரிவா்த்தனைகளும் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் வங்கியின் வா்த்தகத்தில் 12 சதவீத வளா்ச்சியை தக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் வங்கியின் விற்றுமுதலை நடப்பு நிதியாண்டில் ரூ.1,42,500 கோடி அளவுக்கு உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான வணிக வளா்ச்சியை உருவாக்குவதன் மூலமாக நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டு வங்கிக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்று மகாபலேஸ்வரா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT