வர்த்தகம்

பொய்ச் செய்திகளை களைய முயற்சி: ட்விட்டரின் புதிய வசதி

DIN

பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் ட்விட்டர் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசியல், கரோனா மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பரப்பப்படும் தவறான செய்திகளை களையும் வகையில் ட்விட்டர் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த புதிய வசதி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், "தவறான செய்திகள் என நீங்கள் கருதும் ட்வீட்டுகள் குறித்த புகார் அளிக்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சோதனை நடைபெற்றுவருகிறது. 

அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள இன்று முதல் இந்த வசதியை பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட ட்வீட் குறித்து புகார் அளிக்கும் போது அதை மிஸ்லீடிங் என குறிப்பிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என ட்வீட் செய்துள்ளது.

இதில் சோதனை முயற்சி நடைபெற்றுவருவதால் அனைத்து புகார்கள் குறித்தும் மதிப்பாய்வு செய்ய முடியாது. இதில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்ள சிறிய அளவில் முயற்சியை தொடங்கியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT