வர்த்தகம்

2021 - இரண்டாம் காலாண்டில் 1.28 கோடி ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த 'நோக்கியா'

DIN

ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை தக்கவைத்திருக்கும் 'நோக்கியா' நிறுவனம் 2021-இரண்டாவது காலாண்டில் 1.28கோடி ஸ்மார்ட்போன்களை  சந்தைப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது.

சமீபத்தில் கவுண்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலில் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தைப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை விட 36 சதவீதம் கூடுதலாக இரண்டாம் காலாண்டில் விற்பனை செய்திருக்கிறது நோக்கியா நிறுவனம் .

அதன் முக்கிய ஆக்கங்களான நோக்கியா 1.4 , 'ஜி' மற்றும் 'சி' தொடர் ஸ்மார்ட்போன்களால் தான் இது சாத்தியம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம்  ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தியதில் உலகளவில் இராண்டாம் இடம் பெற்றதோடு மேலும் செல்போன் சந்தை மதிப்பில் 18 சதவீத பங்குகளையும் தக்கவைத்திருக்கிறது நோக்கியா .

ஒட்டுமொத்தமாக அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து கடந்த காலாண்டில் சந்தைப்படுத்தப்படுத்தபட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை இந்த காலாண்டில் 7 சதவீதம் குறைந்திருக்கிறது. இதற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் போடப்பட்ட கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கும் காரணம் என கூறப்பட்டாலும் இதுவரை 30.29 கோடி ஸ்மார்ட்போன்கள் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட தற்போது கரோனாவால் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால் இந்தக் காலாண்டில்  ஏற்றுமதி 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT