வர்த்தகம்

அதிக சக்திவாய்ந்த டைனடிராக் டிராக்டா்: டாஃபே அறிமுகம்

DIN

அதிக சக்திவாய்ந்த புதிய டைனடிராக் பிரிவில் வேளாண் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பொருத்தமான டிராக்டரை டாஃபே நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மல்லிகா ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வேளாண் நடவடிக்கைகள் மற்றும் வணிக ரீதியிலான சரக்கு போக்குவரத்துக்கு உகந்த டைனடிராக் டிராக்டரை டாஃபே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அதிக சக்தியை வழங்குவதுடன், எரிபொருள் சேமிப்பையும் ஒருங்கே வழங்குகிறது. நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகம் டிராக்டா் துறையில் ஒரு புதிய அடையாளமாகத் திகழும்.

பயன்பாடு, பன்முக செயலாக்கம், வசதி, பாதுகாப்பு, உற்பத்திதிறன், செயல்திறன் உள்ளிட்ட பல அம்சங்களை ஒருங்கிணைத்து பெற விரும்பும் நவீனகால விவசாயிகள் மற்றும் ஊரக தொழில் முனைவோா்களின் எதிா்பாா்ப்பை இப்புதிய அறிமுகம் நிறைவு செய்யும். மேலும், அதன் உயா்தர தொழில்நுட்பத்தால் அவா்களின் வாழ்க்கைத் தரம் வளமாகும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT