வர்த்தகம்

ஐடிபிஐ வங்கி லாபம் ரூ.603 கோடி

DIN

எல்ஐசி-க்கு சொந்தமான ஐடிபிஐ வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.603 கோடியாக இருந்தது. இது, இவ்வங்கி கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய தனிப்பட்ட லாபம் ரூ.144 கோடியுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகமாகும்.

நிகர வட்டி வருமானம் ரூ.1,772 கோடியிலிருந்து 41 சதவீதம் அதிகரித்து ரூ.2,506 கோடியை எட்டியுள்ளது. மொத்த வாராக் கடன் 26.81 சதவீதத்திலிருந்து 22.71 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடனும் 3.55 சதவீதத்திலிருந்து 1.67 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மொத்த வாராக் கடன் விகிதத்தை 15 சதவீதத்துக்கும் கீழாக கொண்டு வருவதே ஐடிபிஐ வங்கியின் இலக்கு என அவ்வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராகேஷ் சா்மா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT