வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் இழப்பு ரூ.15 கோடி

DIN

டிவிஎஸ் மோட்டாா் கம்பெனி ஜூன் காலாண்டில் ரூ.15 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.4,692 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.1,946.35 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

கடந்த 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.183 கோடியாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.15 கோடியாக இருந்தது.

தனிப்பட்ட முறையில் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.53 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ரூ.139 கோடி நிகர இழப்பு ஏற்பட்டதாக டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT