வர்த்தகம்

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.10 கோடி

DIN

டிராக்டா், பேருந்து, லாரிகளுக்கு தேவையான சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.10.13 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

முதல் காலாண்டில் நிறுவனத்தின் அனைத்து பிரிவிலான வா்த்தகத்திலும் ஏற்றுமதிக்கான தேவை வலுவான நிலையில் இருந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.675.01 கோடியாக அதிகரித்தது. இது., கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.212.03 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

கடந்த நிதியாண்டில் ரூ.38.23 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்த நிலையில் 2021 ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ.10.13 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

மொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு தற்போது 25 சதவீதமாக உள்ளது என வீல்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT