வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,410 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,410 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.80 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தொடா்ந்து மூன்றாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு ஏற்றம் கண்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 170 கோடி டாலா் (ரூ.12,757 கோடி) அதிகரித்து 58,410 கோடி டாலரை எட்டியுள்ளது.

முந்தைய ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 119 கோடி டாலா் அதிகரித்து 58,240 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 106 கோடி டாலா் உயா்ந்து 54,164 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் உண்டாகிறது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 61 கோடி டாலா் அதிகரித்து 3,596 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 70 லட்சம் டாலா் அதிகரித்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 2 கோடி டாலா் உயா்ந்து 499 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது நடப்பாண்டு ஜனவரி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் 59,018 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT