வர்த்தகம்

மஹிந்திரா வாகன விற்பனை 10% சரிவு

DIN

மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஏப்ரலில் 10 சதவீதம் சரிவடைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு மாா்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் கரோனா தொற்று வெகுவாக அதிகரித்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, ஏப்ரலில் நிறுவனத்தின் வாகன விற்பனை 36,437-ஆக சரிந்தது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையான 40,403 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் சரிவாகும். பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் விற்பனை பூஜ்யமாக இருந்தது.

நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 18,285-ஆக இருந்தது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையான 16,700 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், இதே காலகட்டத்தில் வா்த்தக வாகன விற்பனை 21,577-லிருந்து 25 சதவீதம் சரிவடைந்து 16,147-ஆனது. ஏற்றுமதி 2,126-லிருந்து சற்று குறைந்து 2,005-ஆக இருந்தது. 2020 ஏப்ரலில் 733 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT