வர்த்தகம்

ஹிந்துஸ்தான் யுனிலீவா்: நிகர லாபம் ரூ.2,185 கோடி

DIN

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனம் (ஹெச்யுஎல்) இரண்டாவது காலாண்டில் ரூ.2,185 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ரூ.12,812 கோடி வருவாயினை ஈட்டியது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.11,510 கோடியுடன் ஒப்பிடுகையில் 11.31 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் செலவினம் ரூ.9,054 கோடியிலிருந்து ரூ.10,129 கோடியாக அதிகரித்தது. இதையடுத்து, நிகர லாபம் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.2,185 கோடியை எட்டியது. முந்தைய நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,974 கோடியாக இருந்தது என ஹெச்யுஎல் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஹெச்யுஎல் பங்கின் விலை 4.06 சதவீதம் குறைந்து ரூ.2,546.65-ஆக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT