வர்த்தகம்

ஆப்பிள் ‘ஐபோன் 13’ விற்பனை ஆரம்பம்

DIN

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்று (செப்-24) முதல் தொடங்க இருக்கிறது.

ஐபோன் 13 ப்ரோ ரூ.1,19,000 , ப்ரோ மாக்ஸ் ரூ.1,29,000 எனவும் ஐபோன் மினி 69,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா , இந்தியா , கனடா,ஜெர்மனி , ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

 ஐபோன் 13 சிறப்பம்சங்கள் : 

*6.1 மற்றும் 6.7 இன்ச் அளவுள்ள தொடுதிரை ( நான்கு மாறுபட்ட தொடுதிரையுடன் வெளியாகிறது)

* புதிய ஃபேஸ் ஐடி 

* நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம் , 5எம்என் வேவ் லெந்த் 

*ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம் 

*லிடார் சென்சார் 

* நீண்ட பாட்டரி வசதி 

ஐபோன் 12 யை விட மேலும் முன்னகர்ந்து  முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது ஐபோன் 13 . 

பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமான சூழலில் ஒருவரின் முகம் ஒருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இதைக்கொண்டு முகக்கவசம் அணிந்திருந்தாலும் 'முகத்தை அறியும்' வசதியை ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வழங்க இருக்கிறது.கடவுச் சொல்லைப்போல  'ஃபேஸ் டிடெக்சன்' எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மேலும் இனி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பிற ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற 'ஃபேஸ் ஐடி' இடம்பெறும் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT