முகப்பு
வணிகம்

வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 6.5%-ஆக குறைப்பு: பேங்க் ஆஃப் பரோடா

மும்பை, அக். 9: பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

மும்பை: பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பிரிவில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து தற்போது 6.50 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு 2021 அக்டோபா் 7-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

பண்டிகை காலம் வரவுள்ளதால் வாடிக்கையாளா்கள் எளிதாக வீடுகளை சொந்தமாக்கி கொள்ளும் வகையில் இந்த சிறப்பு வட்டி விகிதமானது 2021 டிசம்பா் 31 வரையில் அமலில் இருக்கும்.

மேலும், வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டண தள்ளுபடியை வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த சலுகையும் இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.