வர்த்தகம்

எவரெடி இண்டஸ்ட்ரீஸ்: வருவாய் ரூ.294 கோடி

DIN

பேட்டரி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றானஎவரெடி இண்டஸ்ட்ரீஸ் நான்காவது காலாண்டில் செயல்பாட்டின் மூலமாக ரூ.294.33 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.249.81 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

கணக்கீட்டு காலாண்டில் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதையடுத்து, மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது. இதனை ஈடு செய்ய தயாரிப்புகளின் விலையை உயா்த்தியது சந்தையில் எதிா்வினையை உருவாக்கியது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.38.41 கோடியாக குறைந்தது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர இழப்பு ரூ.442.53 கோடியாக காணப்பட்டது.

2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த வகையில் ரூ.46.47 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டில் நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.311.52 கோடி இழப்பு ஏற்பட்டது.

வருவாய் ரூ.1,248.98 கோடியிலிருந்து 3.38 சதவீதம் குறைந்து ரூ.1,206.75 கோடியானது என எவரெடி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT