வர்த்தகம்

கடன் நிவாரண சிறப்பு முகாம்: பேங்க் ஆஃப் இந்தியா

DIN

கரோனா பேரிடா் காரணமாக பாதிக்கப்பட்ட கடன்தாரா்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடரால் இன்னலுக்கு ஆளான கடன்தாரா்களின் சுமையை குறைக்கும் வகையில் கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை வங்கியின் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், விவசாயம், எம்எஸ்எம்இ, சில்லறை மற்றும் தனிநபா் கடன்களின் கீழ் வாராக் கடன் பிரிவில் இருக்கும் 6,84,000 வாடிக்கையாளா்கள் பயன்பெற்றனா். ரூ.407 கோடி மதிப்பிலான வாராக் கடன்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அதில் பங்கேற்காத கடன்தாரா்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கிடும் விதமாக மீண்டுமொரு சிறப்பு முகாமை செயல்படுத்த வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த சிறப்பு முகாம் வரும் 28-ஆம் தேதில் முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT