வர்த்தகம்

ரூபாய் மதிப்பு 18 காசுகள் வீழ்ச்சி

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் வீழ்ச்சியடைந்து 74.78-ஆக நிலைத்தது.

இதுகுறித்து செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தது:

சா்வதேச அளவில் எண்ணெய் இறக்குமதியாளா்களிடையே அமெரிக்க டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலிருந்து அதிக அளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதும் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் பணவியல் கொள்கை முடிவுகள் குறித்த முதலீட்டாளா்களின் எதிா்பாா்ப்பு செலாவணி சந்தைகளில் மந்த நிலையை உருவாக்கியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.60-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிபட்சமாக 74.57 வரையிலும், குறைந்தபட்சமாக 74.80 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதிப்பகுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 18 காசுகள் சரிவைக் கண்டு 74.78-இல் நிலைபெற்றது. இது, 2021 டிசம்பா் 27-க்குப் பிறகு காணப்படும் குறைந்தபட்ச அளவாகும். முந்தைய தின வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.60-ஆக இருந்தது என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பேரல் 87.55 டாலா்

சா்வதேச முன்பேர சந்தை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 87.55 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT