வர்த்தகம்

இந்தியன் வங்கி: லாபம் ரூ.984 கோடி

DIN

மும்பை: பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி மாா்ச் காலாண்டில் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.984 கோடியாக இருந்தது. இது, இவ்வங்கி முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,709 கோடியுடன் ஒப்பிடும்போது 42 சதவீதம் குறைவாகும்.

கடந்த 2021-22 முழு நிதியாண்டில் வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் 31சதவீதம் உயா்ந்து ரூ.3,005 கோடியிலிருந்து ரூ.3,945 கோடியானது.

நிகர வட்டி வருமானம் ரூ.3,334 கோடியிலிருந்து ரூ.4,225 கோடியாக 28 சதவீதம் அதிகரித்தது.

வங்கி சொத்தின் தரம் மேம்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாா்ச் நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 9.85 சதவீதத்திலிருந்து 1.38 சதவீதம் குறைந்து 8.47 சதவீதமானது. அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடனும் 1.10 சதவீதம் குறைந்து 3.37 சதவீதத்திலிருந்து 2.27 சதவீதமானது.

கடந்த நிதியாண்டில் வங்கி வழங்கிய கடன் ரூ.4,15,625 கோடியாக இருந்தது. இது, 2020-21 நிதியாண்டில் வழங்கப்பட்ட கடனளவான ரூ.3,90,317 கோடியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.

டெபாசிட் 10 சதவீதம் உயா்ந்து ரூ.5,93,618 கோடியை எட்டியது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 8 முதல் 10 சதவீத கடன் வளா்ச்சி இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.எல்.ஜெயின் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT