முகப்பு
வணிகம்

தொடர் வீழ்ச்சியில் பேடிஎம்: பங்குதாரர்கள் அதிர்ச்சி

இந்தியப் பங்குச் சந்தையில் பேடிஎம் நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

இந்தியப் பங்குச் சந்தையில் பேடிஎம் நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை ரஷியா-உக்ரைன் போருக்குப் பின் கடுமையான சரிவிலும் ஏற்றத்திலும் சென்றுகொண்டிருக்கிற நிலையில் இணையப் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் பங்குகளின் விலை கடந்த சில நாள்களாக கடுமையான வீழ்ச்சியை அடைந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மாதம் ஒரு பேடிஎம் பங்கின் விலை ரூ.850 என வர்த்தகமானது. ஆனால், இன்று ரூ.618 வரை வீழ்ச்சியடைந்துள்ளதால் பங்குதாரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, கடந்த மார்ச் 11 ஆம் தேதி பணப் பரிவர்த்தனை விதிகளை முறையாகப் பின்பற்றாத விவகாரத்தில்  பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் காரணமாகவும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →