முகப்பு
வணிகம்

எல்ஐசி நிகர லாபம் 50 சதவிகிதம் சரிவு!

பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 50 சதவிகிதம் சரிவடைந்து ரூ.7,925 கோடியாக குறைந்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:58 AM
பகிர்:

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 50 சதவிகிதம் சரிவடைந்து ரூ.7,925 கோடியாக குறைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. கடந்த நிதியாண்டில் ரூ.15,952 கோடி நிகர லாபம் ஈட்டியது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய் ரூ.1,32,631.72 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,07,397 கோடியானது.

எல்.ஐ.சி.யின் மொத்த வருமானம், கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.2,22,215 கோடி ரூபாயில் இருந்து ரூ.2,01,587 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments