சினிமா

நான் பாதி மலையாளி: கமல் பேட்டி

உலக நாயகன் போன்ற பட்டங்களை நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் பட்டத்தால் என் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

எழில்

பாபநாசம் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். அப்போது கமல் பேசியதாவது:

‘இந்தப் படத்துக்காக என் பெயரைப் பரிந்துரைத்த மோகன்லாலுக்கு நன்றி. இந்தப் படம் 40 நாள்களுக்குள் முடிந்தபோதே அது தயாரிப்பாளருக்கு வெற்றிப் படமாகிவிட்டது. குறித்த நேரத்தில் முடித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி. இவர்களுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய விரும்புகிறேன்.

நான் பாதி மலையாளி. இதை கேரளாவில் சொன்னால் அவர்களுக்காக சொன்னேன் என்பார்கள். இங்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு அன்பும் மரியாதையும் அங்கு கிடைக்கிறது. கேரளாவில் கேட்டால் என்னை முழு மலையாளி என்பார்கள்.

உலக நாயகன் போன்ற பட்டங்களை நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் பட்டத்தால் என் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். உலக நாயகன் என்பதை விடவும் நல்ல நடிகன் என்று சொல்லப்படுவதையே விரும்புகிறேன்.

நடிகர் சங்கம் குறித்து அறிவுரை கேட்டால் சொல்வேன்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT