முகப்பு
சினிமா

சுந்தர்.சி.-யின் ‘சங்கமித்ரா’வில் நடிக்க விஜய் மறுப்பு!

இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் விஜய் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் விஜய் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் நடிக்க விஜய் மறுத்துள்ளார்.

பாகுபலியை விடவும் பெரிய படம் என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விஜய் நடிக்கவேண்டும் என்று சுந்தர்.சி விருப்பம் தெரிவித்தார். ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் படப்பிடிப்பு எப்படியும் ஒருவருடம் நடைபெறும், கால்ஷீட் 250 நாள்கள் தேவைப்படும் என்கிற காரணங்களால் இப்படத்தில் நடிக்க விஜய் மறுத்துள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா, ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரலாற்றுப் பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.