நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் "றெக்க" படக்குழுவினர் இரண்டு பாடல்களை படமாக்க ஹாங்காங் சென்றுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், லட்சுமி மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படத்தை ரத்தின சிவா சிவா இயக்குகிறார். கிஷோர் , ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இது தொடர்பாக படக்குழுவினர் தெரிவித்ததாவது:
விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் வியாழக்கிழமை ஹாங்காங் புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கே இரண்டு பாடல்களும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.படபபிடிப்பு முடிந்த பின்பு ஆகஸ்ட்-16 ஆம் தேதி அன்று படக்குழுவிவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.