சினிமா

‘இருநூறு கோடி ரூபாய்’ க்ளப்பில் இணைந்த கபாலி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கபாலி' திரைப்படம் செவ்வாய்க்கிழமை அன்று, இந்தியாவில் ரூ. இருநூறு கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்தது.

IANS

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கபாலி' திரைப்படம் செவ்வாய்க்கிழமை அன்று, இந்தியாவில் ரூ. இருநூறு கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்தது.

இது தொடர்பாக திரைப்பட வியாபார ஆய்வாளர் த்ரிநாத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

தென்னகத்து திரைப்படங்களில் வெகு விரைவாக ரூ.இருநூறு கோடி வசூல் செய்த படம் என்றால் அது கபாலிதான். வெளியான ஐந்து நாட்களில் அது இந்த சாதனையை செய்துள்ளது. செவ்வாய் வரை அது ரூ.இருநூற்று ஐந்து கோடி வசூல் செய்துள்ளது. இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழி வசூலையும் சேர்த்தது ஆகும். 

இந்தியாவைப்பொறுத்த அளவில் வெளியான வார இறுதியில் இப்படம் ரூ.நூறு கோடி  வசூல் செய்தது.உள்நாட்டு சந்தையை பொறுத்த அளவில் வெளியான வார இறுதியில் அது ரூ. 128 கோடி வசூல் செய்திருந்தது. இது தென்னக மொழிப்படங்களில் ஒரு சாதனை ஆகும்.

இவ்வாறு த்ரிநாத்  தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT