முகப்பு
சினிமா

வெற்றிமாறன் - சூரி இணையும் விடுதலை பட முக்கிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 10 ஜூலை, 2021 at 4:44 PM
வெற்றிமாறன் - சூரி இணையும் விடுதலை பட முக்கிய தகவல்
பகிர்:

'அசுரன்' பட வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

சமீபத்தில் புதிதாக துவங்கப்பட்ட இளையராஜாவின் ஸ்டுடியோவில் இந்த படத்தின் பாடல்பதிவு நடைபெற்றது. அப்போது இளையராஜாவுடன் வெற்றிமாறன் கலந்துரையாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.