முகப்பு
சினிமா

சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் பார்க்கிங் படத்தின் ஸ்னீக் பீக்!

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

Updated On : 29 நவம்பர், 2023 at 7:32 PM
பகிர்:

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது

Advertisement

இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த படம் 'பார்க்கிங்'.  இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பார்க்கிங் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.