சினிமா

லியோ நடனக் கலைஞர்கள் 1300 பேருக்கு சம்பள நிலுவை: காவல் ஆணையரிடம் புகார்!

லியோ படத்தில் பங்குபெற்ற நடனக் கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

DIN

லியோ படத்தில் பங்குபெற்ற நடன கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் லியோ. ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடிதான்’ பாடலில் பங்கேற்ற 1300 நடனக் கலைஞர்களுக்கு முறையாகப் பேசியபடி சம்பளம் தரப்படவில்லை என காவல் ஆணையரிடம் புகாரளிக்க நடனக் கலைஞர்கள் திரளாகச் சென்றுள்ளனர்.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் தங்களில் பலருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை, கொடுக்கப்பட்ட சம்பளமும் முன்பு பேசியபடி தரப்படவில்லை, தயாரிப்பு தரப்பும் யூனியனும் தங்களை அலைய வைப்பதாக நடனக் கலைஞர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும், படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு சேரவேண்டிய ஊதியத் தொகை முழுமையாகக் கிடைக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!

ஹிமாசல், பஞ்சாப் வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT