நடிகை பிரதீபா இன்ஸ்டாகிராம்
சினிமா

இலங்கைத் தமிழில் ராப் பாடல்! அசத்தும் சின்னத்திரை நடிகை!

தமிழில் 1994ஆம் ஆண்டு வெளியான சிந்து நதிப் பூ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலை, இலங்கைத் தமிழில் ராப் மெட்டில் பாடியுள்ளார்.

DIN

சின்னத்திரை நடிகை பிரதீபா இலங்கைத் தமிழில் பாடி அசத்தியுள்ள விடியோவை இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தமிழில் மெட்டு அமைத்து பாடப்பட்ட பாடலை வரிகள் மாறாமல் இலங்கைத் தமிழில் ராப் மெட்டில் பிரதீபா பாடியுள்ளார். தமிழ், ஆங்கில ராப் பாடல்களைப் பாடி அவ்வபோது விடியோ வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்ட நடிகை பார்த்திபா தற்போது இலங்கைத் தமிழிலும் ராப் பாடலைப் பாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கங்கா என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்தவர் நடிகை பிரதீபா. இத்தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.

அடிப்படையில் அரசு முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராகும் நோக்கத்தில் படித்துவந்த இவர், நடிகையாக பலரைக் கவர்ந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் பிரதீபாவுக்கு குவிந்து வருகின்றன.

தற்போது மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், மகாநதி தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நடிகை பிரதீபா

தேர்வுகளுக்கு படித்துவந்தாலும், பாடல், நடனத்தின்மீது ஆர்வம் கொண்ட பார்த்திபா, பாடல் பாடியும் நடனமாடியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது விடியோக்களைப் பதிவிடுவது வழக்கம்.

குறிப்பாக ராப் பாடல்களை அதிகம் பாடிவந்தார். அந்தவகையில் தற்போது இலங்கைத் தமிழில் ராப் பாடலொன்றைப் பாடி விடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

பாடல் பாடி அசத்தும் நடிகை பிரதீபா

தமிழில் 1994ஆம் ஆண்டு வெளியான சிந்து நதிப் பூ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலை, இலங்கைத் தமிழில் ராப் மெட்டில் பாடியுள்ளார். நடிகை பிரதீபாவின் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பார்த்திபாவின் பாடல் விடியோக்களுக்கான ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சிறையிலிருந்து வந்து வாக்களித்த எம்பி ரஷீத்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

ராதாகிருஷ்ணன் வெற்றி பெறச் சொந்த ஊரில் சிறப்புப் பிரார்த்தனை!

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

SCROLL FOR NEXT