சினிமா

எனது அரசன் அனிருத்துக்கு நன்றி: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐசி படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐசி படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.

தற்போது,  ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்திற்கு, லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு கோவை, உடுமலைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது அனிருத் இசையில் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இதற்கு விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அனிருத்தை அரசன் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT