லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ பாடல்: வெளியாகும் நேரம்?
நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கும் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் இன்று மாலை வெளியாகிறது.
நடிகர் கமல்ஹாசனின் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கி லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள பாடல் இன்று மாலை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் பாடலில் லோகேஷ் கனராஜ் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்துள்ளார்.
இந்த பாடலில் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.
‘இனிமேல்’ பாடல் இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.