நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !
நடிகர் பிரபாஸ் வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படம் மூலம் அறிமுகமானர் பிரபாஸ். அதன் பிறகு சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிர்ச்சி என பல்வேறு படங்களில் நடித்த பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்து பான் இந்தியா நடிகரானர்.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்று காலை ஒரு ஸ்டோரியை வெளியிட்டிருந்தார்.
அதில், “டார்லிங்க்ஸ், கடைசியாக ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழைய போகிறார், காத்திருங்கள்” என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இவரது திருமணம் குறித்த வதந்திகள் ஏர்கனவே பரவி வந்த நிலையில், தனது திருமணம் பற்றி அறிவிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.