முகப்பு
செய்திகள்

புறக்கணிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி - 2?

கவனம் பெறாத கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம்...

Updated On : 2 மார்ச், 2026 at 4:45 PM
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 3:25 PM

தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் போதிய கவனம் கிடைக்காமல் திணறி வருகிறது.

இயக்குநர் காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் கடந்த பிப்.27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்தினைப் போலவே இதிலும் சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் பலரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 4:44 PM

நாடு முழுவதும் இப்படத்திற்கு எதிர்ப்பு குரல் பதிவானதும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறியதும் பெரிய பின்னடவையாக அமைந்த நிலையில், ரூ. 30 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 10 கோடி கூட வசூலிக்காமல் திணறி வருவதாகவும் பல திரைகளிலிருந்து காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் தோல்விப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.